மேம்பாலம் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு
திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரியை நேரில் சந்தித்து மனு கொடுத்த பொதுமக்கள்
மேம்பாலம் கட்டும் இடத்தை வேறு பகுதிக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிறு-பசுவன்பாளையம்- வன்னிப்பாக்கம் பகுதியை இணைக்கும் வகையில் கொசஸ் தலை ஆற்றில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்ததை மாற்றி உள்ளதாகவும், இதனை தடுக்கக்கோரி கருப்புக்கொடி ஏந்தி கொசஸ்தலை ஆற்று நீரில் வழிதேடும் போராட்டம் நடத்த உள்ளதாக துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் இதுகுறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா, சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பசுவன்பாளையம்- வன்னிபாக்கம்- இடையே கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழகஅரசு நபார்டு திட்டத்தின் மூலமாக ஞாயிறு ஊராட்சி யில் 18.50 கோடியில்அமைக்க அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இத்திட்டத்தை பொறியாளர் மூலம் அரசுக்கு தவறான தகவல் கொடுத்து மாற்றிய தாக கூறப்படுகிறது. இதனால் ஞாயிறு ஊராட்சியில் அமைய வேண்டிய மேம்பாலம் தற்போது மடியூர் கம்மார்பாளையத்தில் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதனை எதிர்த்து ஞாயிறு,வன்னிப்பாக்கம் உள்ளி ட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி கொசஸ்தலை ஆற்றில் வழிந்து ஓடும் நீரில் வரும் 11-ஆம் தேதி நடத்தவுள்ளதாக துண்டு பிரசுரம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இச்சம்பவம் குறித்து ஊராட்சி தலைவர்களான வன்னிப்பாக் கம்மஞ்சுளா பஞ்சாட்சரம், மாபுஸ் கான் பேட்டை சண்முகம், அருமந்தை விக்கிரமன், ஞாயிறு ஊராட்சித்துணைத்தலைவர் ஜனார்த்தனன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைசெயலாளர் சரவணன், மேல்நல்லாத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ஆறுமுகம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரதாப் சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் சுப்பிர மணி, ஞாயிறு சதீஷ்ஜி, ஆனந்தராஜ் ஆகியோர் மாவட்ட வருவாய் துறை அதிகாரியை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
மேலும், துண்டுப்பிரசுரத்தில், ஞாயிறு -வன்னிப்பாக்கம்- அருமந்தை- மாபூஸ்கான் பேட்டை - பெருங்காவூர்- புதூர்திருநிலை - நெற்குன்றம் - சிறுவாக்கம் -மாலிவாக்கம் - தடப்பெரும்பாக்கம் -வலதிகைமேடு -பெரிய முல்லைவாயல் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மேம்பாலம் போராட்டக்குழுவினர் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக அச்சிடப்பட்டு ள்ளது.இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu