/* */

பழவேற்காட்டில் மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதம்

பழவேற்காட்டில் மீனவர்களுக்கு சொந்தமான 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதமானது.

HIGHLIGHTS

பழவேற்காட்டில் மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதம்
X

பழவேற்காட்டில் நள்ளிரவில் 80 மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதமானது.

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் நள்ளிரவில் 80 மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பழவேற்காடு சுற்றி சுமார் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் கடலிலும், மற்றொரு பிரிவினர் பழவேற்காடு ஏரியிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்கள் பாரம்பரியமாக பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இன்று அதிகாலை கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்களின் வலைகள் பாதுகாப்பாக வைக்கப்படும் இடத்தில் திடீரென தீ கொழுந்து விட்டு எரிவதை கண்ட அப்பகுதி மீனவர்கள் அலறியடித்தபடி சென்று தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். எனினும் மீன்பிடி வலைகள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சேதமானது.

40 மீனவர்கள் ஒன்றாக குழுவாக இணைந்து ஏரியில் சென்று மீன்பிடி தொழில் செய்யக்கூடிய பாடிவலைகள் எனப்படும் இரு பிரிவினரின் வலைகள் அந்த பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த நிலையில், முற்றிலும் ஆக எரிந்து சேதமாகி இருக்கிறது. மீன்பிடி வலைகள் மட்டுமின்றி இறால் பிடிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் என சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இந்த தீ விபத்தில் எரிந்து சேதம் அடைந்திருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் மீனவர்களின் மீன்பிடி வலைகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 22 April 2024 2:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்