சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் கூட்டரங்கில் கவுன்சிலர்கள் கூட்டம்

சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் கூட்டரங்கில் கவுன்சிலர்கள் கூட்டம் சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் தலைமையில் நடைபெற்றது.
Tiruvallur News- பொன்னேரி அடுத்த சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் கூட்டரங்கில் கவுன்சிலர்கள் கூட்டம் சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் தலைமையில் நடைபெற்றது.
துணை பெருந்தலைவர் மீ.வே.கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலசேகரன், அமிழ்தமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைத்தல், தார் சாலைகள், பேவர்பிளாக் சாலைகள் அமைத்தல், குடிநீர் வசதி அமைத்தல், உயர்தரமின்விளக்கு அமைத்தல், ஆழ்துளை கிணறு அமைத்தல், குடிநீர் பைப்லையன் அமைத்தல், நீர்த்தேக்கத்தொட்டி அமைத்தல், மற்றும் ஊராட்சிகளில் உள்ளிட்ட பணிகள் செய்வது குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கையாக விவாதிக்கப்பது.
பின்னர் அதிகாரிகள் உரியநடவடிகைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். பின்னர் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் பத்மபிரியா, சந்திரசேகர், கனிமொழி, பிரகாஷ், மொழியரசி, பாஸ்கரன், சுகவேணி, தீபா, கர்ணன், ரேவதி, கோமதி, ருக்மணி, சந்திரா, மாலதி, சகிலா, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu