திருப்பாலைவனம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருப்பாலைவனம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

திருப்பாலைவனம் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்.

திருப்பாலைவனம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமை ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கைஅமரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்தி தடுப்பூசியைப் போட சுகாதாரத்துறை மூலம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி திருவள்ளூர்மாவட்டம், பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது திருப்பாலைவனம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

துணைத்தலைவர் சுகுணா கோபி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சவுந்தரராஜன் வரவேற்றார். கிராம சுகாதார செவிலியர் ஜெயபாரதி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைப் போட்டனர்.

இதில் பகுதி சுகாதார செவிலியர் ரேணுகா, அங்கன்வாடி பணியாளர் லட்சுமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

முகாமில் பொதுமக்கள் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தவாறு காத்திருந்து போட் டுச் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!