சூரப்பட்டில் கொரோனா சிகிச்சை மையம்: அமைச்சர் திறந்து வைத்தார்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக பல்வேறு இடங்களில் மருத்துவமனை அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை அம்பத்தூர் அருகே சூரப்பட்டில் உள்ள வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் ஆக்ஸிஜன், சித்தா, மற்றும் கொரோனா சிகிச்சை மையம் என்று 265 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு அதன் துவக்க விழா நடைபெற்றது.
மாதவரம் சட்ட மன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்து, சிகிச்சை அளிக்கப்படும் அறைகள் மற்றும் மருந்து அறைகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை 3793 சித்தா படுக்கைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அநேகமாக தமிழகத்தில் கொரோனா கேர், கொரோனா சித்தா மருத்துவம், ஆக்ஸிஜன் வசதி ஆகிய மூன்றும் இணைந்து ஒரே வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள இடம் இதுதான்.
இதனால் சென்னையில் உள்ள ஸ்டான்லி, ராஜிவ் காந்தி மருத்துவமனை, கே.எம்.சி மருத்துவமனைகளில் நெருக்கடி குறைந்து அருகில் உள்ள மக்களுக்கு சிகிச்சை பெற ஏதுவாக இருக்கும் என தெரிவித்த அவர் சிகிச்சை மையங்களில் அதிகப்படுத்தப்படும் நிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களை அதிகபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu