பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி!

பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி!
X

பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகரன்

பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனித்தொகுதியில் மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளராக கை சின்னத்தில் துரை சந்திரசேகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்ட துரை சந்திரசேகரன், கொரோனா என்ற கொடிய வைரஸிலிருந்து பொது மக்களை காப்பாற்ற களப்பணியில் ஈடுபட்டார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பாக காய்ச்சல் என்று மருத்துவரிடம் சென்றுள்ளார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!