காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
X

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் முகக்கவசம் வழங்கினர்.

பொன்னேரியில் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் பங்கேற்று பொதுமக்களிடம் மூன்றாவது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும்,

மேலும் முகக்கவசம் தவறாமல் அணிய வேண்டும், தடுப்பூசியை தயங்காமல் செலுத்தி கொள்ள வேண்டும் என விரிவாக எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கும், பேருந்து பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் முகக்கவசங்களை காவல்துறையினர் வழங்கினர்.

Tags

Next Story
ai in future agriculture