வடசென்னை அனல் மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

வடசென்னை அனல் மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

Today Protest News -வடசென்னை அனல் மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Today Protest News -பொன்னேரி அருகே வடசென்னை அனல் மின் நிலைய 2வது நிலையின் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் அழைத்து தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணியின் போது உயிரிழக்கும் ஊழியர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கி பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கடந்த 17ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.

தமிழக அரசு உரிய உத்தரவாதம் அளிக்காததால் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, நெல்லூர் என அடுத்தடுத்து கடந்த 9நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வடசென்னை அனல் மின் நிலைய 2வது நிலையின் நுழைவு வாயிலில் முன்பு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்து பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை முன் வைத்தனர். மேலும் பணி நிரந்தரம் செய்யும் வரையில் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஊதியம் வழங்காமல் மின்வாரியமே நேரடியாக அனைத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆந்திராவில் தஞ்சமடைந்து 9வது நாளாக போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தங்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி அவர்களை உடனே தமிழகம் திரும்பிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் அனல்மின் நிலைய அதிகாரிகள், காவல்துறையினர் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பத்தாண்டுகளுக்கு மேலாக பணி செய்து வருகிறோம் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கை நிறைவேறாது வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்றும் உடனடியாக அரசு கவனம் செலுத்தி தாங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களால் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!