மணலிபுதூரில் கண்டெய்னர் லாரியை திருடிச் சென்ற நபர் கைது

மணலிபுதூரில் கண்டெய்னர் லாரியை திருடிச் சென்ற நபர் கைது
X

கோப்பு படம் 

மணலிபுதூரில், கண்டெய்னர் லாரியை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.

பொன்னேரி அடுத்த மணலி புதுநகரில் ஷெட் ஒன்றில், ட்ரைலர் உடன் கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த லாரியை யாருக்கும் தெரியாமல், டிரைவர் கடத்திச் சென்று சேலம் அருகே ட்ரெய்லரை மட்டும் விற்றுவிட்டு லாரி மட்டும் வழக்கம்போல் நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

இதைக்கண்ட லாரி உரிமையாளர், லாரி ட்ரெய்லர் எங்கே கேட்டதற்கு டிரைலர் எனக்கு எதுவும் தெரியாது என டிரைவர் மறுத்ததை அடுத்து, லாரி உரிமையாளர் மணலிபுதுநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் இதையடுத்து மணலி புதுநகர் குற்றப்பிரிவு போலீஸ் ஆய்வாளர் சிட்டி பாபு தலைமையில் தனிப்படை அமைத்து அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.

அதன் அடிப்படையில், ஓட்டுநரை போலீஸார் கைது செய்து நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சேலத்தில் உள்ள ஒரு பகுதியில் ட்ரெய்லரை விற்றுவிட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து குற்றவாளியான டிரைவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!