ஆரணி பேரூராட்சி வணிகர் சங்கத்தில் ஆலோசனை கூட்டம்

ஆரணி பேரூராட்சி  வணிகர் சங்கத்தில் ஆலோசனை கூட்டம்
X
பைல் படம்
ஆரணி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து வணிகர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் கொரோனா 3ம் அலையில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் ஆரணி வர்த்தக சங்கத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டம் 50க்கும் மேற்பட்ட வணிக சங்க உறுப்பினர்கள், வணிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்டாயம் முக கவசம் அணிந்த வியாபாரம் செய்ய வேண்டும்.

மேலும் சமூக இடைவெளிகளை கடைப்பிடித்தும், வாடிக்கையாளர்கள் முக கவசமின்றி வந்தால் பொருட்களை வழங்கக்கூடாத என்றும் தெரிவித்தார். மீறினால் கடும் நடவடிக்கையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்