பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

 பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

காங்கிரஸ் கட்சியை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் மத்திய பாஜக அரசு கண்டித்து பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி அருகே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கி பழிவாங்குவதாக மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை முடக்கி இருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தலைமையில் அக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் எதிர்கட்சியை பழிவாங்கும் நடவடிக்கையாக வரிமான வரித்தறையின் மூலம் ஒன்றிய பாசிச பாஜக அரசு இதுபோன்ற செயல்களை செய்து வருவதாக சாடினர். அமலாக்கத்தறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை ஏஜென்சிகளை கொண்டு எதிர்கட்சிகளை முடக்க முயற்சிப்பதற்கும் அப்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story