பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

பொன்னேரியில் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொன்னேரியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அண்ணா சிலை காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பு எரிய வைத்தும், நூதன முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அதானி, அம்பானிக்கு ஆதரவாக ஏழை மக்களை சுரண்டி கார்ப்பரேட்களுக்கு சலுகை வழங்குவதாக குற்றம் சாட்டினர். மேலும் மானியத்தை முற்றிலுமாக நிறுத்தி மக்களை சுரண்டும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் எனவும், கேஸ் விலையை குறைக்க ஒன்றிய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!