அண்ணாமலை உருவ பொம்மை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

அண்ணாமலை உருவ பொம்மை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
X

பொன்னேரி அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

பொன்னேரி அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உருவ பொம்மை காங்கிரஸ் கட்சியினர் எரித்து போராட்டம் நடத்தினர்.

அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து பேசும்போது முன்னாள் ரவுடி எனக் குறிப்பிட்டு பேசினார். காங்கிரஸ் மாநில தலைவரை முன்னாள் ரவுடி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே பாஜக மாநில தலைவரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில் அக்கட்சியினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆருத்ரா கோல்ட் மோசடி மன்னன் அண்ணாமலை என்ற பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அண்ணாமலையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலையின் உருவ பொம்மையையும், அண்ணாமலை உருவப்படத்தையும் காங்கிரஸ் கட்சியினர் தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து உருவ பொம்மையை பறித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்