பொன்னேரி காவல் நிலையத்தில் திண்டுக்கல் லியோனி மீது புகார்

பொன்னேரி காவல் நிலையத்தில் திண்டுக்கல் லியோனி மீது புகார்
X

திண்டுக்கல் லியோனி.

பொன்னேரி காவல் நிலையத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் திண்டுக்கல் லியோனி மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி போலீஸ் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் யாபேசு, திண்டுக்கல் லியோனி மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அண்மையில் திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திண்டுக்கல் லியோனி பேசினார்.

அப்போது செருப்பை தலையில் தூக்கி வைத்தும், சட்டையை கழற்றி அக்குளில் வைத்து சென்ற சமூகத்தை மேயர் ஆக்கியது ஸ்டாலின் என பட்டியலின சமூகத்தை தவறாக சித்தரித்து கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் பழங்குடியின மக்களை இழிவாக பேசியதாக பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி..!