பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X
பொன்னேரியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் போரை கண்டித்து பொன்னேரியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்னேரியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை தடுத்து நிறுத்த வலியுறுத்தினார்கள்.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் போர் ஓராண்டாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருவதுடன் பள்ளிகள், மசூதிகள் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்திய துணையுடன் இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் அப்பாவி பொதுமக்களை போரிலிருந்து காக்க வலியுறுத்தியும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தை உடனடியாக தடுக்க வலியுறுத்தியும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சியினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி