நல்லூர் ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை பணிகள் துவக்கம்

நல்லூர் ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை பணிகள் துவக்கம்
X

பைல் படம்.

நல்லூர் ஊராட்சியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் பூமி பூஜை செய்து துவக்கிவைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் ஊராட்சியின் பாலமுருகன் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் ரூ. 8லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான சுதர்சனம் வழிகாட்டுதலின்படி, சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான கருணாகரன் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார். அருகில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
smart agriculture iot ai