கல்லூரி மாணவியை வீட்டுக்கு அழைத்த பேராசிரியர் கைது

கல்லூரி மாணவியை வீட்டுக்கு அழைத்த பேராசிரியர் கைது
X

கைது செய்யப்பட்ட பேராசிரியர்

பொன்னேரியில் கல்லூரி மாணவியை வீட்டுக்கு அழைத்த பேராசிரியர் மீது பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு கலை கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் மகேந்திரன் என்பவர் கல்லூரி மாணவி ஒருவரிடம் தவறான முறையில் செல்போனில் பேசி, நட்பாக பழக வீட்டுக்கு வருமாறு அழைக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கல்லூரி நிர்வாகமும், பொன்னேரி காவல் துறையும், கல்லூரியில் வைத்து உதவி பேராசிரியர் மகேந்திரனிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது. பின்னர், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்த காவல் துறை சென்ற போது, சக மாணவர்கள் கோஷமிட்டு, உதவி பேராசிரியர் மகேந்திரனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனிடையே காவல் நிலையத்தில் சுமார் 7 மணி நேரம் விசாரணை செய்து, மகேந்திரன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிபதி குடியிருப்பில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர்.

அரசு கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை தமது வீட்டுக்கு வரச் சொல்லி கல்லூரி பேராசிரியர் செல்போனில் பேசிய ஆடியோ கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture