கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் அணிந்து ஆர்பாட்டம்

கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் அணிந்து ஆர்பாட்டம்
X

பொன்னேரி அரசுக் கலைக் கல்லூரி முன்பாக கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொன்னேரி அரசுக் கலைக் கல்லூரி முன் கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயிலின் முன் கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாகக் கூறி, கண்களில் கருப்பு ரிப்பன் அணிந்து முழக்கங்களை எழுப்பினர். அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசாணை -56ஐ உடனடியாக அமுல்படுத்த வேண்டும், UGC -நிர்ணயித்த ஊதியத்தினை உடனடியாக வழங்கிட வேண்டும்,

கௌரவ விரிவுரையாளர்களின் பணிப் பாதுகாப்பினை உறுதி செய்திடல் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்றிட வேண்டும் என இந்த ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story
ai automation digital future