சோழவரம் அருகே பண்டிகாவனூரில் கஞ்சா விற்றவர் கைது; கார் பறிமுதல்!

சோழவரம் அருகே பண்டிகாவனூரில் கஞ்சா விற்றவர் கைது; கார் பறிமுதல்!
X

சோழவரம் காவல் நிலையம்.

பண்டிகாவனூர் அருகே கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார். 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த பண்டிகாவனூர் அருகே உதவி ஆய்வாளர் ஆறுமுகம் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, பண்டிகாவனூர் ஆற்றங்கரை அருகே சென்று கொண்டிருந்த காரை மடக்கினார். ஆனால் காரை ஓட்டி வந்தவர் தப்பியோட முயன்றனர். அவரை பிடித்து நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவைவும், அவர்கள் ஓட்டி வந்தகாரையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சோழவரம் காவல் நிலையம் அழைத்து சென்று இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!