சோழவரம் அடுத்த காந்திநகரில் பெண் கழுத்தை நெரித்து படுகொலை!

சோழவரம் அடுத்த காந்திநகரில் பெண் கழுத்தை நெரித்து படுகொலை!
X

கொலை குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

சோழவரம் அடுத்த காந்திநகர் பகுதியில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த காந்திநகர் கலைஞர் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி மோகனா (35). அதே பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் (40) தனியார் நிறுவன காவலாளி. தனியாக வசிக்கும் ஏசுதாஸ்க்கு தினமும் சமையல் செய்து தருவதற்காக, மோகனா அவரது வீட்டிற்குச் செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று மாலை சமையல் செய்வதாக மோகனா ஏசுதாஸ் வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் ஜேசுதாஸ் கதவைப் பூட்டிக் கொண்டு வேகமாக வெளியேறுவதை அருகில் வசிப்பவர்கள் கண்டனர்.

சந்தேகத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஏசுதாஸ்சின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு மோகனா கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏசுதாசை தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!