சின்னம்மை தர்மசாலை ஞானசபை, 10ம் ஆண்டு தொடக்க விழா

சின்னம்மை தர்மசாலை ஞானசபை, 10ம் ஆண்டு தொடக்க விழா
X

வள்ளலார் தாயார் சின்னம்மை தர்ம சாலை ஞான சபையின், 10 ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

வள்ளலார் தாயார் சின்னம்மை தர்ம சாலை ஞான சபை, 10ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

பொன்னேரி அருகே, வள்ளலார் தாயார் சின்னம்மை இல்லமான சின்னக்காவணம் பகுதியில் தர்ம சாலை ஞான சபையின் 10 ஆண்டு தொடக்க விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, சின்னக்காவணம் கிராம பகுதியில் வள்ளலாரின் தாயார் பிறந்த இடத்தில் ஆண்டுதோறும் ஜோதி தரிசன விழா சிறப்பாக நடைபெறும்.அந்த வகையில். நேற்று தர்ம சாலை ஞான சபையின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை 5 மணி முதல் தொடர் பிராத்தனைகளும், அகவல் பாராயணமும் நடத்தப்பட்டது.விழாவின் முக்கிய நிகழ்வாக சன்மார்க்க நீதிக்கொடியை பல ஆண்டுகளாக உணவு உண்ணாமலும், உறக்கமின்றியும் சன்மார்க்க தொண்டாற்றி வரும் திருப்போரூர் சுவாமிகள் ஏற்றினார். விழாவில் சன்மார்க்க பேச்சாளர்கள் வள்ளலாரின் கருத்துக்களை தெரிவித்தனர்.வள்ளலார் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

சன்மார்க்கத்தை வளர்க்க பாடுபட்ட பெரியோர்களுக்கு சன்மார்க்க சுடரொலி விருதுகள் வழங்கப்பட்டன.சன்மார்க்க பேருரை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நாள் முழுவதும் கலந்து கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story
ai solutions for small business