பொன்னேரி அருகே ரூ.62 கோடி மதிப்பு நீர்தேக்க பணிகளை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு

பொன்னேரி அருகே ரூ.62 கோடி மதிப்பு நீர்தேக்க பணிகளை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு
X

நீர்த்தேக்க பணிகளை பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பொன்னேரி அருகே ரூ.62 கோடி மதிப்பு நீர்தேக்க பணிகளை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே 615ஏக்கர் பரப்பளவில் உள்ள காட்டூர் - தத்தைமஞ்சி ஏரிகளை இணைத்து ரூ.62.36கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்த்தேக்கம் அமைப்பதற்கான பணிகள் கடந்த 2020ஜூலையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த நீர் தேக்கத்தில் 58மில்லியன் கனஅடி கொள்ளளவு நீரை தேக்கி வைக்கும் நிலையில் உள்ள ஏரிகளில் 350மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தாரர்களிடம் கேட்டறிந்து குறித்த காலத்தில் விரைவாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்த நீர்த்தேக்க பணிகள் முடிந்ததும் 1600ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் எனவும், இந்த பணிகள் ஜூன் மாதத்தில் முடிவடையும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!