வடமாநில தொழிலாளியிடம் செல்போனை பறிக்க முயன்ற வழிப்பறி கொள்ளையர்கள்

செல்போன் பறித்து சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
Cellphone Robbery Attempt
மீஞ்சூரில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளியிடம் செல்போனை பறிக்க முயன்ற வழிப்பறி கொள்ளையர்கள். விடாமல் இருசக்கர வாகனத்தை பிடித்து தொங்கிய வடமாநில தொழிலாளியால் வழிப்பறி செய்த செல்போனை கீழே வீசிவிட்டுகொள்ளையர்கள் தப்பி சென்றனர். இது அங்குள்ள சிசிடிவி பதிவாகியுள்ளதால் அக்காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தங்கி இரும்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வருபவர் தினக்குமார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வேலைமுடிந்து மீஞ்சூர் பஜார் வழியே செல்போனில் பேசியபடியே வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் இருவர் வந்து தினகுமாரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்ப முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த தினக்குமார் சுதாரித்தபடி இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்த இரும்பு கம்பியை இழுத்து பிடித்து கொண்டு தொங்கியபடி சாலையில் உரசிக்கொண்டே சென்றார். சுமார் 500மீட்டர் தூரத்திற்கு கொள்ளையர்களின் இருசக்கர வாகனத்தை விடாமல் பிடித்து தொங்கியபடி துரத்தினார். விரக்தியடைந்த கொள்ளையர்கள் வழிப்பறி செய்த செல்போனை கீழே வீசி எறிந்தனர். இதனையடுத்து வடமாநில தொழிலாளி இருசக்கர வாகனத்தின் பிடியை தளர்த்தியபோது வழிப்பறி கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதில் சிராய்ப்புடன் காயமடைந்த வடமாநில தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இருசக்கர வாகனத்தை பிடித்து தொங்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu