உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானதையொட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானதையொட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

பொது மக்களுக்கு இனிப்பு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன்.

ஆரணி பேரூர் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானதையொட்டி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

பெரியபாளையம் அருகே ஆரணியில். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராக பதவி ஏற்றதை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆரணி பேரூர் திமுக சார்பில் பட்டாசு வெடித்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


தி மு க.இளைஞரணி செயலாளரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியதை முன்னிட்டும், ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசருக்கு சிறுபான்மை துறை அமைச்சராக பதவி வழங்கியதற்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொண்டாடும் விதமாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆரணி பேரூர் திமுக சார்பில் பேரூர் செயலாளர் முத்து தலைமையில் பேருந்து நிறுத்தகம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ கோவிந்தராஜன் கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் பொது மக்களுக்கும், பேருந்திற்காக காத்திருந்த பயணிகளுக்கும், அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகளுக்கும், இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே. சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், பொருளாளர் கரிகாலன், முன்னாள் பேரூர் செயலாளர்கள் கண்ணதாசன், வெங்கடேசன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தமிழழகன், நிர்வாகிகள் நீலகண்டன், சூர்யா, கோபிநாத், கவுன்சிலர் சுபாஷினி, சாய் சத்யா, சுல்தான், உதயகுமார், ஜெயக்குமார், விமல் ராஜ், தமிழ்ச்செல்வன், வசந்தகுமார், குருவப்பா, கலையரசி, ரவி, சலேக், ஜெகநாதன், பன்னீர்செல்வன், சரளம்மாள், ஆகிய உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு