வெங்கலில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது ; ஆட்டோ பறிமுதல்

வெங்கலில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது ; ஆட்டோ பறிமுதல்
X

பைல் படம்

வெங்கல் கிராமத்தில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் கிராமத்தில் மாம்பலம் சாலையில் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு ஆட்டோவில் உட்கார்ந்திருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் உட்கார்ந்திருந்த ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

போலீசார் கஞ்சாவுடன் ஆட்டோவை பறிமுதல் செய்து குற்றவாளிகள் 3 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

அவர்கள் வெங்கல் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (20), கௌதம் (26), சுரேந்தர் (26) என்பது தெரியவந்தது. குற்றவாளிகள் மீது வெங்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!