சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து ரூ.1 லட்ச மதிப்பு பொருட்கள், ரொக்கம் கொள்ளை

சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து ரூ.1 லட்ச மதிப்பு பொருட்கள், ரொக்கம் கொள்ளை
X

பைல் படம்.

மீஞ்சூரில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்ச மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் பிரபல பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது. இந்த கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது கடையில் இருந்த 50ஆயிரம் ரூபாய் ரொக்கம், கடையில் இருந்த பொருட்கள் என 1லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

மேலும் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகும் இயந்திரத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!