பொன்னேரியில் நடந்த பி.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை அணி சாம்பியன்

பொன்னேரியில் நடைபெற்ற பி.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் பலகோடி மற்றும் பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளனர். இந்த கிரிக்கெட் போட்டி தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால் கிரிக்கெட் ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்றுஉள்ளது. ஐ.பி.எல். போல் டி20 டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படுகிறது. இவைகள் தவிர பல்வேறு தொடர் கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் தனியார் கல்லூரி மைதானத்தில் சதீஷ் ஸ்போர்ட்ஸ் சார்பில் பி.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலிருந்து தலைசிறந்த 16 அணிகள் பங்கேற்றன.இதன் இறுதிப்போட்டியில் சென்னை மாதவரத்தை சேர்ந்த எஸ்.பி.சி.சி. அணியும் சென்னை கொளத்தூரை சேர்ந்த பிரண்ட்ஸ் லெவன் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய எஸ்.பி.சி.சி. அணி 20 ஓவரில் 155ரன்கள் எடுத்தது.பின்னர் ஓவருக்கு எட்டு ரன் என்ற இலக்குடன் களமிறங்கிய ப்ரெண்ட்ஸ் லெவன் அணி 17.3 ஓவரில் 157 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சர்வதேச அரிமா சங்கத்தின் மாவட்ட தலைவர் லயன் ரவிக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வெற்றிபெற்ற ப்ரெண்ட்ஸ் லெவன் அணிக்கு சாம்பியன் கோப்பையை பரிசாக வழங்கி பாராட்டி பேசினார்.மேலும் ஆட்ட நாயகன், தொடர் நாயகன், சிறந்த அணித்தலைவர்கள் விருதுகளும் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu