குத்துச்சண்டை போட்டி: அத்திப்பட்டு புதுநகர் கூலி தொழிலாளி மகன் சாதனை!

குத்துச்சண்டை போட்டி: அத்திப்பட்டு புதுநகர் கூலி தொழிலாளி மகன் சாதனை!
X

குத்தச்சண்டையில் சாதனை படைத்த மாணவர். 

குத்துச்சண்டை போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த கூலி தொழிலாளி மகன் சாதனை படைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் சேர்ந்தவர் அசோக். ஏழைக் கூலித் தொழிலாளியான இவரது மகன் ஜஸ்வந்த். எண்ணூரில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

குத்துச்சண்டை போட்டியில் ஆர்வம் கொண்ட இவர், தொடர்ந்து 3 வருடங்களுக்கு மேலாக சிறுவயதிலிருந்து குத்துச்சண்டை பயிற்சி பெற்று 14 வயதுக்கு உட்பட்டோர் 28 கிலோ முதல் 30 கிலோ வரை எடை பிரிவில் மாநில அளவில் கடந்த 2019ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி மற்றும் தேசிய அளவில் கோவா மற்றும் கேரளாவிலும் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றவர்.

சர்வதேச அளவில் நேபாளத்தில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற 7வது இண்டோ நேபால் ரூரல் யூத் குத்துச்சண்டை போட்டியிலும் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் மற்றும் கோப்பைகளை பெற்று தொடர்ந்து அசத்தி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் கலந்துகொண்ட ஷேட்டோ பாக்ஸிங் ஆன்லைனில் நடைபெற்ற போட்டியிலும் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!