பொன்னேரியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

பொன்னேரியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
X

பொன்னேரியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பொன்னையன்.

பொன்னேரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பொன்னையன், சூழ்ச்சி, வஞ்சகம், தந்திரம் என அத்தனைக்கும் சொந்தகார கட்சி பிஜேபி தான் என கடுமையாக சாடினார். சுதந்திர இந்தியாவில் யாருமே நீதித்துறையில் தலையிடாது நிலையில் பிஜேபி நீதித்துறையை காலில் போட்டு மிதித்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது எனவும் விமர்சித்தார்.

ஆர்எஸ்எஸ் இயக்கம் தான் பிஜேபி-ஐ ஆட்டுவிக்கும் பாம்பாட்டி என்றார். ஆர்எஸ்எஸ்-ஐ பொறுத்த வரையில் இமயம் முதல் கன்னியாகுமரி வரையில் ஒரே சக்தி இருக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. ஆரிய சக்தி, பிராமண சக்தி என்பது போல மத வெறி பிடித்தவர்கள் எனவும், அனைத்து ஜாதியினரையும் தங்களது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இந்துமதம் என்பது நம் அனைவருக்கும் உள்ளது என்றும் நமக்கு உள்ளது பற்று என்றும் ஆனால் ஆர்எஸ்எஸ் வெறி பிடித்தவர்கள் என்றார். பாஜக, காங்கிரஸ் ஆளில்லாத 5மாநிலங்களில் கணவன்-மனைவி போல இருந்தவர்களின் முதுகில் குத்திவிட்டு பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதாக விமர்சித்தார். நீதிமன்றத்தில் வழக்குகளை போட்டு மோடி சொல்வதை நீதிபதியை கேட்க வைத்து ஆட்சியை பிடித்ததாக கூறினார். அதே அணுகுமுறையை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்ற சூழ்ச்சியை முறியடித்தவர் எடப்பாடி பழனிசாமி என்றார்.

ஜெயலலிதா காலத்தில் இருந்து கட்சியில் இருப்பதால் ஓபிஎஸ்-ற்கு புத்திமதி சொல்லி கட்சியில் வைத்து கொள்ளலாம் என கூறியவர் எடப்பாடி பழனிசாமி எனவும் ஆனால் மாவட்ட செயலாளர்களும், பொது குழுவும் ஒப்புக்கொள்ளாமல் பன்னீர்செல்வத்தை தூக்கி வெளியில் வீசிவிட்டதாக தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் வரை சென்றும் ஓபிஎஸ் தோற்றுவிட்டதாக தெரிவித்தார். பிஜெபியை ஒழித்து கட்டி, கடலில் தூக்கி வீசிவிட்டார் என்றும், கடலில் மூழ்கும் கப்பலாக தமிழ்நாட்டில் பாஜக உள்ளதாக கூறினார். இது எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரம் எனவும் தெரிவித்தார். சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி 30வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்ளை அதிமுக பக்கம் இழுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுநியம் பி.பலராமன், முன்னாள் எம்எல்ஏ கே. எஸ்.விஜயகுமார், உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!