பழவேற்காட்டில் கடலில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு

பழவேற்காட்டில் கடலில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு
X

பழவேற்காடு கடலில் மூழ்கிய இளைஞரின் உடல் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்படுகிறது

பழவேற்காட்டில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்று மாயமான இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்ற 19 இளைஞர் நேற்று முன்தினம் தமது நண்பர்களுடன் பழவேற்காடு கடலுக்கு குளிக்க சென்றுள்ளார். திடீரென அலையில் சிக்கி மாயமாகியுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட புகாரின் பேரில் திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மீனவர்கள் உதவியுடன் நேற்று மாயமான இளைஞரை தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை கோரைக்குப்பம் பகுதியில் பாலாஜி சடலம் கரை ஒதுங்கியது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி