கொசஸ்தலை ஆற்றில் மாயமான இருவரது சடலங்கள் மீட்பு

கொசஸ்தலை ஆற்றில் மாயமான இருவரது சடலங்கள் மீட்பு
X

கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள்

பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் நேற்று மீன்பிடிக்கும் போது மாயமான இருவரது சடலங்கள் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த இடையஞ்சாவடி அருகே நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்களுடன் இணைந்து சென்னை வியாசர்பாடியை சேர்ந்த நிவாஸ், அஜீத் ஆகியோர் கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது நிவாஸ், அஜித் ஆகிய இரு இளைஞர்கள் ஆற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டு மாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி புதுநகர் காவல்துறையினர் மற்றும் மணலி தீயணைப்புதுறை வீரர்கள் ஆற்றில் விழுந்த இருவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டாவது நாளாக இன்று தேடும் பணியில் அடுத்தடுத்து அஜித் மற்றும் நிவாஸ் ஆகிய இருவரையும் சடலமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மணலி புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story