பொன்னேரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரத்த தான முகாம்

பொன்னேரியில் பாரதிய ஜனதா கட்சி  சார்பில் ரத்த தான முகாம்
X

பொன்னேரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

பொன்னேரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

பொன்னேரியில் பி.ஜே.பி.சார்பில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்புவதற்கான ரத்ததான முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக ரத்ததான முகாம் பொன்னேரி நகர பி.ஜே.பி. சார்பில் நடைபெற்றது.பிரானதா சக் ஷம்,சேவா பாரதி மற்றும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் பா.ஜ.க. நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் தன்னார்வமாக இரத்தங்களை வழங்கினர்.

முதல் ஆளாக பிறந்தநாள் காணும் பி.ஜே.பி. பொன்னேரி நகர பொருளாளர் பாலாஜி என்பவர் ரத்தம் வழங்கி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில செயற் குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் கலந்துகொண்டு ரத்த தான முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பொன்னேரி நகரத் தலைவர் சிவகுமார் செய்தார்.

பா.ஜ.க. மாநில, மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் குமார்,அன்பாலயா சிவகுமார்,நந்தன்,கோட்டி,ரமேஷ்,பவித்ரா,சுகன்யா,அப்பு மீஞ்சூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் ஸ்ரீராமன்,சமூக ஆர்வலர்கள் ரகுநாத்,ராதாகிருஷ்ணன்,பூபதி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story