மீஞ்சூர் ஒன்றியத்தில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மீஞ்சூர் ஒன்றியத்தில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன். பாலகணபதி தாமரை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மீஞ்சூர் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் திருவள்ளூர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன் பால கணபதி திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டூர், தத்தை மஞ்சி, பழவேற்காடு, திருப்பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பி.வி.சங்கர் ராஜா, பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன். பாலகணபதி தாமரை சின்னத்திற்கு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்த வெளி வாகனத்தில் நின்றவாறு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தத்தை மஞ்சி கிராமத்தில் பாஜக மாவட்ட துணை தலைவரும், தத்தை மஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஏற்பாட்டில் சிறு பழவேற்காடு கலைமணி ஐ.டி.விங் ஒன்றிய தலைவர் நாகஜோதி, மாவட்ட துணை தலைவர் தங்கமணி உள்ளிட்ட அப்பகுதி மக்கள் தாமரை மலர்களைக் கொண்டு வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனர்.

பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் பழவேற்காடு பகுதிகளில் அதிகம் வசிக்கும் இஸ்லாமிய பொது மக்களிடம் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்தார். திருப்பாலைவனத்தில் மாவட்ட செயலாளர் லயன். கலைவாணி ஏற்பாட்டில் பாஜகவினர் வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கர்,ஆர் எம்.ஆர். ஜானகிராமன், தடப்பெரும்பாக்கம் குமார்,அன்பாலயா சிவகுமார்,நந்தன்,கோட்டி,இருசப்பன்,பரமானந்தம்,விஷ்ணுகுமார்,ராஜேஷ்,சிவகுமார்,ஊரணம் மேடு நந்தகுமார்,மாலதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அன்பு,குப்பன்,பாரத்,மாலதி உள்ளிட்ட திராளான கட்சியின் நிர்வாகிகள் அவருடன் சென்று வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!