சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் பணம் எண்ணிக்கை

சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி கோவில் உண்டியல் திறந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எண்ணப்பட்டது.
பொன்னேரி அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இரண்டு மாதங்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் 56 லட்சத்து 76 ஆயிரம் என ஆலயத்தின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னம்பேடு ஊராட்சியில் அமைந்துள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும், இக்கோவிலில் தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமை நாட்களில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். திருமண தடை, வீடு கட்டுதல், ரியல் எஸ்டேட், குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் ஊஞ்சல் கட்டியும், வீடு பிரச்சனை வர செங்கற்களை அடுக்கி வைத்து அவற்றிற்கு வழிபாடு நடத்துவதால் பிரச்சனைகள் தீர்வுக்கு வந்துவிடும் என்பது பக்தர்கள் அசையாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் கடந்த ஆகஸ்ட் மாதம் முடிந்த பின்னர் செவ்வாய்க்கிழமை மட்டுமல்லாமல் நாள்தோறும் கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், மட்டுமல்லாது புறநகர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வர தொடங்கி விட்டனர். இதனால் எப்போதும் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களில் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் என்னும் பணி இந்து அறநிலை துறையின் உதவி ஆணையர் சித்ராதேவி, ஆலய செயல் அலுவலர் செந்தில்குமார், அதிகாரிகள் சரவணன், கலைவாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இதில் ரூபாய் 56 லட்சத்து76 ஆயிரமும்,105 கிராம் தங்கமும், 5. கிலோ வெள்ளி உள்ளிட்டவை பக்தர்கள் செலுத்தி இருப்பதாக ஆலய நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu