மாவட்ட கவுன்சிலர் நிதியில் காரியமேடை பூமி பூஜை ;

மாவட்ட கவுன்சிலர் நிதியில் காரியமேடை பூமி பூஜை ;
X

நெற்குன்றம் ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் நிதி மூலம் புதிய காரியம் செய்யும் மேடை அமைக்கும் பணிக்கு பூமி பஜை நடைபெற்றது.

நெற்குன்றம் ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் நிதி மூலம் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய காரியம் செய்யும் மேடை அமைக்கும் பணிக்கு பூமி பஜை நடைபெற்றது.

திருவள்ளூர்மாவட்டம்பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெற்குன்றம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள தகனமேடையில் காரியம் செய்யும் மேடை இல்லாமல் அப்பகுதி மக்கள் கஷ்டப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன் தனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மேற்கண்ட பகுதியில் புதிய காரியம் செய்யும் மேடையை சுமார் ஐந்து லட்சம் மதிப்பீட்டில் அமைக்க முடிவு செய் தார்.

இதற்கான பூமி பூஜை நடைபெற் றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவு ன்சிலர் தேவி தயாளன்,காங்கிரஸ் கட்சி மாநில விவசாய அணி செயலாளர் தயாளன்,ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கரன்,ஊராட்சி மன்ற தலைவர் நெற்குன்றம் பாபு, முன்னாள் தலைவர் துரைசாமி நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!