ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
X

மீஞ்சூரில் எஸ்பிஐ வங்கியை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து மீஞ்சூரில் வங்கியை முற்றுகையிட்டு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் 2ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு எம்பி பதவியை பறித்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் எஸ்பிஐ வங்கியை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

அதானி குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்வதாக காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் குற்றம் சாட்டினார். அதானி குறித்த கேள்விக்கு பதிலளித்தால் மாட்டி கொள்வோம் என்ற அச்சத்தில் பழி வாங்கும் நடவடிக்கையாக ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் அப்போது குற்றம் சாட்டினார்.

ராகுல்காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதில் ஆரணி பேரூர் துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார், உள்ளிட்ட ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!