வரம் தரும் பாலமுருகன் கோவில் பூமி பூஜை!
பூஜையில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தில் வரம் தரும் பாலமுருகன் ஆலயம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறியதாவது,
வன்னிப்பாக்கம் கிராமத்தில் பட்டியலின மக்கள் வழிபட கோவில் இல்லாததால் வரும் தரும் பாலமுருகன் ஆலயம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டமே ஆன்மீக பூமி எனவும் அண்மை காலமாக மாதமாற்றம் அதிகரித்து வருவதாகவும், பட்டியலின மக்கள் குறிவைக்கப்பட்டு கல்வி, தொழிற்பயிற்சி கொடுப்பதாக கூறி மதமாற்றம் செய்து வருவதாகவும், பட்டியலின மக்களை மதமாற்றுவதால் நமது குலதெய்வ வழிபாடு சீரழிந்து விடும் என்றார்.
இவற்றை எல்லாம் தவிர்க்கின்ற வகையிலே இந்த ஆலயம் விரைவில் அனைவரும் வழிபடும் வகையில் விரைவில் கட்டிமுடிக்கப்படும் என்றார். தமிழ்நாட்டில் சர்ச் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், வெளிநாட்டு பண உதவியுடன் ஆண்டுக்கு 1600க்கும் மேற்பட்ட சர்ச் கட்டப்பட்டு வருவதாகவும், ஆண்டுக்கு 470க்கும் மேற்பட்ட மசூதிகள் கட்டப்பட்டு வருவதாகவும், ஆனால் 100க்கும் குறைவான கோவில்கள் மட்டுமே கட்டப்படுவதாக தெரிவித்தார்.
ஏற்கனவே உள்ள கோவில்களையும் பராமரிக்க முடியாமல் உள்ளதாகவும், 42000க்கும் மேற்பட்ட கோவில்களை நிர்வகிக்கும் அறநிலையத்துறை, கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை கொண்டு புதிய கோவில்களை கட்ட வேண்டும் என வலியுறுத்தினார். திருப்பதி தேவஸ்தானம் அனைத்து இடங்களிலும் புதிய கோவில்களை கட்டுவது போல, பழனி முருகன் கோவில், திருத்தணி முருகன் கோவில் என அனைத்து பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமங்களிலும் முருகன் கோவில்களை கட்டிட வேண்டும் எனவும் அறநிலையத்துறை அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
குலதெய்வம், குலத்தொழில், குலக்கல்வி அனைத்தும் தற்போது விவாத பொருளாக மாறி உள்ளதாகவும், மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் பாரம்பரிய தொழில் செய்பவர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து 2முதல் 3லட்சம் மானியத்துடன் வங்கி கடன் வழங்கி அவர்களை தொழில் முனைவோராக மாற்றும் சிறந்த திட்டம் கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா உட்பட நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து பாரம்பரிய தொழில் பாதுகாக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இது குலத்தொழில் என ஜாதி முத்திரை குத்தி மடைமாற்றம் செய்வதாக சாடினார்.
இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த விடாமல் தடை செய்வதாகவும், இது தவறு எனவும், மத்திய அரசு நேரடியாக இந்த திட்டத்தை நேரடியாக செயல்படுத்தி வருவதாகவும், இளைஞர்கள் அனைவரும் இதில் பயனடையலாம் எனவும், ஜாதிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை எனவும் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் எனவும் ராஜாஜி கொண்டு வந்ததை குலக்கல்வி என கூறி விட்டதாகவும், வானதி சீனிவாசன் இந்த திட்டம் குறித்து விஸ்வகர்மா மக்களிடம் எடுத்து கூறிய போது, செய்யும் தொழிலே தெய்வம் எனவும், எந்த தொழிலும் கேவலம் கிடையாது எனவும், தற்போது அனைத்துமே விஞ்ஞான ரீதியாக மாறியுள்ளதாகவும், தொழிற்பயிற்சி கல்வி நிலையங்கள் இயங்கி வருவதாக கூறினார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும், இதற்கு ஜாதி முத்திரை குத்துவதாக சாடினார்.
ஒரு குடும்பத்தில் இருந்தே மகன், பேரன் முதலமைச்சர் ஆக வேண்டும், அது குலத்தொழில் கிடையாது, சிற்பியின் மகன் சிற்பம் செய்தால் அது குலத்தொழிலா என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான திமுக, மற்றும் திக உள்நோக்கத்தோடு குலத்தொழில் என ஒடுக்க நினைப்பது இளைஞர்களின் நலனுக்கு எதிரானது, வானதியின் பேச்சு திரித்து வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக சாடினார்.
சென்னை மெட்ரோ திட்டத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது எனவும், மீதி நிதி உலக வங்கி கடன் மூலம் வாங்க வேண்டும் என்றும், ஒருவேளை தமிழ்நாடு அரசு செலுத்த தவறினால் மத்திய அரசே செலுத்தும் நிலை உருவாகியுள்ளதாக என்றார். முதலமைச்சர் நேரில் சென்று நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தியும், அண்ணாமலை கடிதம் எழுதினார். உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்வதாக சாடினார்.
தமிழ்நாட்டில் இந்து சமய ஆன்மீகத்திற்கு எதிராக கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், சனாதனத்தை ஒழிப்போம் என பேசுவதாகவும், அதற்கு பதிலாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சனாதன தர்மத்தை காப்போம் என கூறியதாகவும், பெயர் குறிப்பிடாத போதே நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டதாகவும், இதே போல உதயநிதி குறித்து பெயர் குறிப்பிடாத போதும் விமர்சனம் செய்ததார், சனாதனத்தை ஒழிப்பது தான் திமுகவின் லட்சியமா எனவும், கம்யூனிஸ்ட் கட்சியினர் எழுதி கொடுத்ததை தெரியாமல் உதயநிதி படித்து விட்டார். முதலமைச்சராக வர போகிறவர், தற்போது துணை முதலமைச்சர் இது போல கூறலாமா எனவும், அந்த கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் போதை பொருள் திமுகவினர் விற்பனை செய்வதாக அதிமுக கூறிய கருத்து உண்மை, போதை பொருள் கடத்தியதாக, கஞ்சா கடத்தியதாக, கள்ளச்சாராயம் வழக்கில் திமுகவினர் கைதாகி வருவதாகவும், இதில் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாற வேண்டும் என்றார்.
லட்டு சர்ச்சை ஒருபுறமிருக்க வெள்ளை சர்க்கரையில் கெமிக்கல் குறித்த கேள்விக்கு லட்டு தயாரிப்பது பிராமணர்கள் இல்லை, லட்டு சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள் இல்லை எனவும் ஆனால் லட்டு பிரசாதத்தை கொண்டு பிராமணர்களை கிண்டலடிப்பதாகவும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும், லட்டு பிரசாதம் புனிதமானது என்றார். சர்க்கரையை தவிர்ப்பீர்களா என்ற கேள்விக்கு இந்து சமயத்தில் கிருஷ்ணார்ப்பணம் என கூறி உட்கொள்வார்கள் எனவும், பழனியில் முருகனுக்கு அபிஷேகம் செய்த பிறகு அது விஷயமாகவே இருந்தாலும் அமிர்தமாக மாறி நோயை குணப்படுத்திடும்.
இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu