அரசு கல்லூரியில் விஜய கீதம் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு கல்லூரியில் விஜய கீதம் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பொன்னேரி அரசு கல்லூரியில் விஜயகீதம் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அரசு கல்லூரியில் விஜய கீதம் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அரசினர் உலக நாத நாராயணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் உள்ள விஜயகீதம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கு விழிப்புணர்வு பெண்கள் பாதுகாப்பு,மற்றும் தொழில் முனைவோராக வளர்வதற்கான கலந்தாய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியினை விஜயகீதம் அறக்கட்டளையின் நிறுவனர் கீதா ஒம்சரவணன் தலைமை தாங்கி நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப் பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், பொன்னேரி அரசு பொது மருத்துவமனை முதன்மை மருத்துவர் அனுரத்தனா,(அறுவைசிகிச்சைநிபுணர்) டி. ஜே. எஸ். கல்வி குழு இயக்குனர் கபிலன்,கல்லூரி முதல்வர் டாக்டர் சேகர், அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி,மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அதிகாரி நிஷா ந்தினி, குழந்தைகள் நல்வாழ்வு அமைப்பின் சேர்மன் ஆக்லியா, மத்திய புழல்சிறை விஜிலென்ஸ் சாருமதி,புழல்சிறை மனோதத்துவ நிபுணர் வனிதா, விஜய கீதம் உதவி ஆர்கனிசர் ஹர்ஷினி ஓம் சரவணன், விஜய கீதம் அறக்கட்ட ளையின்செயலாளர்ஓம்சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஜய கீதம் அறக்கட்டளை நிறுவனர் கீதா ஓம்சரவணன் ,மற்றும் பொன்னேரி அரசு கல்லூரியினர் செய்திருந்தனர்.இதில் 500க்கு மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி