தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் சார்பில் பொன்னேரியில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. நீண்டநாள் கோரிக்கையான தனி நல வாரியம் அமைத்திட வலியுறுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில தலைவர் மாயாண்டி தலைமையில் ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர். தங்களை நீண்டகால கோரிக்கையான தனி நல வாரியம் அமைத்திட வேண்டும், தீபாவளிக்கு போனஸ் கேட்டும் செவிசாய்க்காத தமிழக அரசு தங்களின் நலன் கருதி பொங்கலுக்கு போனஸ் கொடுத்து உதவிட வேண்டும், ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிற்சங்க பரிந்துரையை அவசியமாக்கிட வேண்டும், மின் பாதுகாப்பு விதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், நலத்திட்ட உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் ஐடிஐ அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை தொழிலாளர்கள் எழுப்பினர்.
மிகவும் ஆபத்தான பணியை செய்துவரும் தங்களது அத்தியாவசிய கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் வரை தங்களின் அறவழி போராட்டம் தொடரும் என மாநில தலைவர் மாயாண்டி செய்தியாளர்களிடம் உறுதிபட தெரிவித்தார்.இந்த ஆர்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் அருண், சோலையப்பன், திருமலைராஜன், பி.ஜி.ரமேஷ், ஜெ.ரமேஷ், மணிகண்டன், மாவட்ட தலைவர் ஞானசேகர், மாவட்ட செயலாளர் ஏழுமலை உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu