பழவேற்காடு முகத்துவாரத்தில் 2 படகுகளில் 9 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி

பழவேற்காடு முகத்துவாரத்தில் 2 படகுகளில் 9 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி
X

ரேஷன் அரிசி பைல் படம்

பழவேற்காடு முகத்துவாரத்தில் 2 படகுகளில் கடத்த முயன்ற 9 டன் ரேஷன் அரிசியை கடலோர காவல் படை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடலோர காவல் படை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2நாட்டு படகுகளில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து 2 படகுகள் மூலமாக ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 9டன் ரேஷன் அரிசியை கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், ஆந்திராவிற்கு படகு மூலம் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற மூர்த்தி மற்றும் அவரது மகன் ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கைது செய்யப்பட்ட இருவரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!