ஆத்துப்பாக்கம்: பைக்கில் வந்து மூதாட்டியிடம் ஜெயின் பறிப்பு..!

ஆத்துப்பாக்கம்: பைக்கில் வந்து மூதாட்டியிடம் ஜெயின் பறிப்பு..!
X
ஆத்துப்பாக்கம் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மூதாட்டி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பெரியபாளையம் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வள்ளலார் நகர் உள்ளது. இங்கு சுபத்ரா (65) என்ற மூதாட்டி வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டு வாசலை மூதாட்டி பெருக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுபத்ராவிடம் இந்த பகுதியில் டீக்கடை ஏதாவது உள்ளதா என்று கேட்டார்களாம். அதற்கு மூதாட்டி இந்த பகுதியில் டீக்கடை ஏதுமில்லை என்று கூறினாராம்.

இவ்வாறு பேசிக் கொண்டிருந்த அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் சென்று விட்டார்களாம். இதனை சற்றும் எதிர்பார்க்காத மூதாட்டி அதிர்ச்சி அடைந்து திருடன் திருடன் என்று கூக்குரலிட்டாராம். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விசாரித்த போது மேற்கண்டவாறு நடந்தவற்றை மூதாட்டி கூறி அழுது புரண்டாராம். பின்னர் இச்சம்பவம் குறித்து மூதாட்டி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இச்சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். நேற்று மாலை நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு