அறுபடை வீடு முருக பக்தர்கள் சார்பில் சிறுவாபுரி கோவிலுக்கு பால்குடம்
சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள்.
பெரியபாளையம் அருகே ஆரணி அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் சிறுவாபுரிக்கு பால்குடம் ஏந்தி ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி, தமிழர் காலனியில் அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை இயங்கி வருகிறது.இந்த முருக பக்தர்களின் சார்பில் 32-ம் ஆண்டாக பங்குனி உத்திரத் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.இம்மாதம் 25-ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.இதை முன்னிட்டு கடந்த 25-ம் தேதி எல்லையம்மன் கிராம தேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.கடந்த 28-ம் தேதி புதன்கிழமை காலை சிறுவாபுரி முருகனுக்கு செல்லும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் கிராம கோவில்களுக்கு வாடை பொங்கல் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.29-ம் தேதி வியாழக்கிழமை இரவு சிறப்பு பதிபூஜை நடைபெற்றது.நேற்று காலை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் சுமந்தும்,பால் காவடி,பன்னீர் காவடி,புஷ்பக் காவடி,கூண்டு காவடி,தேர் காவடி உள்ளிட்டவைகளுடன் ஆரணி தமிழர் காலனியில் இருந்து பம்பை-உடுக்கை முழங்க "முருகனுக்கு அரோகரா" "கந்தனுக்கு அரோகரா" என பயபக்தியுடன் கோஷம் எழுப்பிய வண்ணம் சிறுவாபுரி கோவிலுக்கு சென்றனர்.பின்னர், இக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இன்று மதியம் ஆரணி,தமிழர் காலனியில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை இரவு பூக்களாலும், மின்விளக்குகலாலும் அலங்கரிக்கப்பட்ட அறுபடை முருகன் வான வேடிக்கையுடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும்,விளக்கு பூஜையம் நடைபெறுகிறது. திங்கட்கிழமை இரவு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பின்னர்,அறுபடை வீடு பக்தர்கள் யாத்திரை புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருசாமிகள்,அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu