வாகன சோதனையில் லாரி ஓட்டுநர்- காவல்துறை இடையே வாக்குவாதம்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் நேற்று இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துறைமுகத்தில் இருந்து பொன்னேரி வழியே தச்சூர் செல்வதற்காக வந்த கண்டைனர் லாரியை காவல்துறையினர் மடக்கி உள்ளனர்.
சரக்குகள் கூட ஏதுமின்றி வரும் தம்முடைய லாரியை எதற்காக மடக்குகிறீர்கள் என லாரி ஓட்டுநர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தம்மை சோதனை செய்யும் காவல்துறையினர் செல்போனில் வீடியோ பதிவு செய்கிறார். த
ம்மை ஓட்டுநர் வீடியோ பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர், ஓட்டுனரின் செல்போனை தட்டிவிடுகிறார். எனினும் விடாமல் லாரி ஓட்டுநர் அவர்களை வீடியோ எடுத்து கொண்டு கேள்வி எழுப்புகிறார். மதுபோதையில் இல்லாமல் வரும் தம் மீது வழக்கு போட பார்க்கிறீர்களா எனவும், ஓட்டுநர் என்றால் இளக்காரமா எனவும் ஓட்டுநர் தம்முடைய ஆதங்கத்தை வெளிப்படுகிறார். ஓட்டுனரின் செல்போனை உதவி ஆய்வாளர் கீழே தட்டிவிடும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu