மீஞ்சூர் அருகே நண்பர்களிடையே தகராறு: இளைஞருக்கு அரிவாள் வெட்டு

மீஞ்சூர் அருகே நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.தலையில் பலத்த வெட்டு காயம்பட்டவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் கிராமத்தை சேர்ந்தவர் வல்லரசு (எ) வாலி (21). இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று மாலை வல்லரசு நெய்தவாயல் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குளத்தின் அருகில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். மது அருந்தி கொண்டிருந்த போது நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி தகராறில் வல்லரசை அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
வல்லரசுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கவே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கி கிடந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர். அளித்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீஞ்சூர் போலீசார் வல்லரசுவை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu