/* */

ஆரணி பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு

ஆரணி பேரூராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ராஜேஸ்வரி, துணைத் தலைவராக காங்கிரசை சேர்ந்த சுகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

HIGHLIGHTS

ஆரணி பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு
X

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில், நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் பத்து இடங்கள் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதில், திமுக மூன்று இடங்களும், அதிமுக ஓரிடம், காங்கிரஸ் ஓரிடம் என 15 பேர் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் இரண்டாம் தேதி ஆரணி பேரூராட்சி மன்ற வளாகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி கலாதரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் சுயேச்சை கவுன்சிலர்கள் 1வது வார்டு உறுப்பினர் அருணா, 2.வது வார்டு உறுப்பினர் கௌசல்யா, 6. வார்டு உறுப்பினர் சுபாஷினி, 7வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி ஆகியோர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே கோவிந்தராஜன் முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் ஆரணி பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 4ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவில் இணைந்த கவுன்சிலர் ராஜேஸ்வரி என்பவர், பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அன்று மதியம் 2 மணி அளவில் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் 14ஆம் வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் சுகுமாரன் 10வது வார்டு திமுக கவுன்சிலர் கண்ணதாசன் போட்டியிட்டனர். இதில் கண்ணதாசனுக்கு 7 வாக்குகளும் சுகுமாரனுக்கு 8 வாக்குகள் கிடைத்தன. சுகுமார் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தனக்கு வாக்களித்த மக்களுக்கு எந்த நேரத்திலும் பணி செய்ய காத்திருக்கிறேன் என்றும் தனக்கு வாக்களித்த சங்க உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். அதேபோல் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுகுமாரன் தனக்கு ஒத்துழைப்பு நல்கி தன்னை துணைத் தலைவராக தேர்வு செய்த சக உறுப்பினர்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

Updated On: 5 March 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  3. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  5. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  7. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  8. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  9. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?