அமைச்சரிடம் வாழ்த்துபெற்ற ஆரணி பேரூராட்சி கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள்

அமைச்சரிடம் வாழ்த்துபெற்ற ஆரணி பேரூராட்சி கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள்
X

தமிழக பால்வளத்துறை அமைச்சரை ஆரணி பேரூராட்சி கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள் சந்தி த்து வாழ்த்து பெற்றனர்.

ஆரணி பேரூராட்சி கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள் பால் வளத்துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்துபெற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா ஆரணி பேரூராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் 10வது வார்டில் ஆரணி பேரூர் கழக முன்னாள் செயலாளர் டி.கண்ணதாசன் என்பவர் போட்டி யிட்டு வெற்றி பெற்றார்.

இதனையடுத்து தமிழக பால்வளத் துறை அமைச்சரும் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளருமான நாசரை ஆவடியில் உள்ள அவரது இல்லத்தில் ஆரணி பேரூராட்சி கவுன்சிலர் டி.கண்ணதாசன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஆரணி பேருர் கழகச் செயலாளர் ஜி.பி.வெங்கடேசன், பேரூர் கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!