பழவேற்காட்டில் திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவினர் நீட் எதிர்ப்பு பிரச்சாரம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,சிறுபான்மை நல உரிமை பிரிவு அணியின் சார்பில் பழவேற்காட்டில் அஞ்சல் அட்டை மூலம் நீட் எதிர்ப்பு பதிவு பிரச்சாரம் நடைபெற்றது.
திமுக நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் நடைபெற்ற அஞ்சல் அட்டை மூலம் நீட் எதிர்ப்பு பதிவு பிரச்சாரம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்பாளர் பழவை அ.முகமது அலவி ஏற்பாட்டில் நடைபெற்றது.
இஸ்லாமிய பெருமக்கள் அதிகம் வசிக்கும் பழவேற்காடு பெரிய பள்ளிவாசல்,கோட்டைக்குப்பம் ஊராட்சி ஜமீலாபாத் ஆகிய பகுதிகளில் நீட் விலக்கு நம் இலக்கு என எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, அஞ்சல் அட்டையின் மூலம் நீட்டுக்கு எதிரான ஆதரவுகளை பதிவு செய்த நீட் எதிர்ப்பு அஞ்சல் அட்டையை பொது மக்களுக்கு மீஞ்சூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி வழங்கினார்.
பின்னர் அங்கு வைக்கப்பட்ட திமுக அஞ்சல் பெட்டியில் கையெழுத்திட்டவர்கள் அட்டைகளை போட்டனர். இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் கதிரவன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தேசராணி தேசப்பன், மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர்கள் எம்.கே.தமின்சா, வழக்கறிஞர் தங்கதேவன், ஏ.கே.விஜய் வின்சென்ட், ரகுமான் கான், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கதிரவன், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி சி.எம்.இரமேஷ், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் காசி, தவமணி, பழவேற்காடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி.எல்.சி.ரவி மற்றும் திமுக நிர்வாகிகள் மைனுதின், துராபுதீன், சரவணன், ஹாரூன் பாஷா, அப்துல் முஜிப், பத்மநாபன், ஜமிலாபாத்சேக்தாவுது, நூர்தின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu