கல்லூரி மாணவர்களுக்கு போதை எதிர்ப்பு விழிப்புணர்வு
கல்லூரி மாணவர்களுக்கு போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மீஞ்சூர் தனியார் கல்லூரியில் போதை ஒழிப்பு, செல்போன் பறிப்பு, பாலியல் தொல்லை, தண்டவாளம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ரயில்வே போலீசார் மாணவர்களுக்கு அறிவுரை. அவசர உதவி மற்றும் புகார் எண்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் ரயில்வே போலீசார் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கொருக்குப்பேட்டை, மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில்வே போலீசார் இணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கஞ்சா, போதைப் பொருள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கல்லூரிக்கு ரயில் மூலம் மாணவர்கள் பயணம் மேற்கொள்வதால் பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைத்தனர்.
ரயில்வே தண்டவாளங்களை கடத்தல், செயின், செல்போன் பறிப்பு, போன்ற சம்பவங்களை தவிர்ப்பது குறித்து மாணவர்களுக்கு ரயில்வே போலீசார் எடுத்துரைத்தனர். மேலும் அவசர உதவி மற்றும் புகார் அளிப்பதற்கான எண்களை அப்போது மாணவர்கள் குறித்து வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மத்திய ரயில்வே பாதுகாப்பு படை: 139, தமிழ்நாடு ரயில்வே போலீஸ் உதவி எண்: 1512, சைபர் குற்றங்களுக்கு 1930, குழந்தைகள் பாதுகாப்பு: 1098 ஆகிய புகார் எண்கள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு அப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu