ஆரணியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
பொது மக்களுக்கு இனிப்பு வழங்கும் பேரூர் திமுக செயலாளர் முத்து, அருகில் பொருளாளர் கரிகாலன், மற்றும் நிர்வாகிகள்.
பொன்னேரி அருகே ஆரணி பேரூர் திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது.
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116- ஆவது பிறந்த நாளை திமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூர் திமுக சார்பில்திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூர் திமுக சார்பில் ஆரணி பேரூராட்சியில் உள்ள 15.வார்டுகளில் பேரூர் கழக செயலாளர் பி.முத்து தலைமையில் கட்சிக் கொடிகளை ஏற்றி வைத்து பின்னர் பேருந்து நிறுத்தகம் அருகே உள்ள அண்ணாவின் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் பொதுமக்களுக்கு,கடை வியாபாரிகளுக்கும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினார்.
இதில் பொருளாளர் ஜி. கரிகாலன், முன்னாள் பேரூர் கழக செயலாளர்கள் டி.கண்ணதாசன், ஜிபி.வெங்கடேசன், நிர்வாகிகள் நீலகண்டன், கோபிநாத், தமிழ்ச்செல்வன், தகவல் தொழில்நுட்ப அணியைச் சார்ந்த சந்தோஷ் குமார், செல்லு சேகரன் சாய் சத்யா, ஜி.பாஸ்கர்,பி. ஜெயக்குமார், கூட்டு வாசு ஆகிய உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu