மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ்கார் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ்கார் உயிரிழப்பு
X

விபத்தில் இறந்த போலீஸ்காரர் கமலதாசன்.

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் போலீஸ்கார் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த திருஆயர்பாடி ராமசாமி ரெட்டி தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் கமலதாசன் (44). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 2005ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சேர்ந்து சென்னை மாநகர மேற்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு துறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மாலை இவர் தனது இருசக்கர வாகனத்தில் பொன்னேரியில் இருந்து சென்னை கூடுவாஞ்சேரி பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதில் காவலர் கமலதாசன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அவரை மருத்துவர் பரிசோதித்த போது வரும் வழியிலேயே கமலதாசன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பொன்னேரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் மோதியது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலர் கமலதாசன் பலியான இடத்தில் அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் நடந்து உள்ளது. அதுவும் விபத்து ஏற்படுத்தும் வாகனங்கள் நிற்காமல் சென்று விடுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே அந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
ai solutions for small business